பல்லாவரத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றம்

By செய்திப்பிரிவு

பல்லாவரம்: பல்லாவரத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை, நீர்வள ஆதாரத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றினர்.

ஏரிகள் மற்றும் நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்லாவரம் ஏரியில் இருந்து கீழ்க்கட்டளை ஏரிக்கு செல்லும் நீர்வழித்தட கால்வாயை ஆக்கிரமித்து ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. இது தொடர்பான புகாரின் பேரில் நீர்வள ஆதாரத் துறையினர், வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஆக்கிரமிப்பு இருப்பது உறுதியானது.

இதனையடுத்து நேற்று உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், உதவி பொறியாளர் பிரஷ்னேவ் பிரபு, பல்லாவரம் வட்டாட்சியர் ராஜா ஆகியோர் தலைமையில் போலீஸார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் கொண்டு, நீர்வழித் தடங்களில் இருந்த உணவகம், உடற்பயிற்சிக் கூடம், கார் பழுது நீக்கும் செட் ஆகியவை அகற்றப்பட்டன.

இதன் மூலம் சுமார் 7,200 சதுர அடி பரப்புள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 10 கோடி இருக்கும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்