தூய்மையான மருத்துவமனைகள் | தமிழகத்தின் 20 மருத்துவமனைகளுக்கு 'காயகல்ப்' விருது

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 20 மருத்துவமனைகள் தூய்மை மருத்துவமனைக்கான காயகல்ப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள தூய்மையான மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் 'காயகல்ப்' விருது வழங்கப்படுகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் வட்டார மருத்துவமனையில் தேசிய சுகாதாரத் திட்ட குழு நேரில் ஆய்வு மேற்கொண்டது. இதில் கட்டிடங்கள் பராமரிப்பு, தூய்மை பராமரிப்பு, மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துதல் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துதல், சுகாதாரக்கல்வி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஆய்வு மேற்கொண்டு மதிப்பெண் வழங்கப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் மொத்தம் 20 மருத்துவமனைகள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 92.86 சதவீத மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றது. இதன் மூலம் இந்த மருத்துவமனைக்கு மத்திய அரசின் காயகல்ப் சான்றிதழும், ரூ.50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட தலைமை மருத்துவமனை 91.86 சதவீதம் மதிப்பெண்களும் 2வது இடம் பிடித்துள்ளது.

இதைத்தவிர்த்து பெள்ளாச்சி, கடலூர், பத்மநாபபுரம், தென்காசி, பென்னாகரம், காஞ்சிபுரம், மன்னார்குடி, காரைக்குடி, செய்யூர்,கும்பகோணம், மேட்டூர் அணை,கோவில்பட்டி, பெரியகுளம், அறந்தாங்கி, வாலாஜாபேட்டை,குளித்தலை, உசிலம்பட்டி, பெரம்பலூர் உள்ளிட்ட மருத்துவமனைகள் தூய்மையான மருத்துவமனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு தலா ரூ.3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்