சென்னை: நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டம்தோறும் 4 அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளன. இங்கு இலவசமாக வழங்கப்படும் அரிசியின் தரம்குறித்து அவ்வப்போது புகார் எழுந்து வந்தது. இதை தவிர்க்க,தரமற்ற அரிசியை கடைகளுக்கு அனுப்பக் கூடாது என்று பொறுப்புஅதிகாரிகளுக்கும், அவ்வாறுவந்தால் அதை மக்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது என்று கடைபணியாளர்களுக்கும் உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சில இடங்களில் தவறுகள் நடந்து வந்தன.
சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினிடம் இதுகுறித்து ஒரு பெண் புகார் கூறினார். ‘நியாயவிலைக் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதுபற்றிகேட்டால், ‘‘யாரிடம் வேண்டுமானாலும் சென்று சொல்லுங்கள்’’ எனகடை விற்பனையாளர்கள் சொல்கின்றனர்’ என்று அவர் கூறினார். இதுகுறித்து விசாரிக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் சில நியாயவிலைக் கடைகளில்பொருட்களை தலைமைச் செயலர்இறையன்பு 30-ம் தேதி ஆய்வுசெய்தார். அப்போது, உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ராஜாராமனும் உடன் இருந்தார்.
இதைத் தொடர்ந்து, பொருட்களை தரமாக வழங்க வேண்டும் என்று உணவுத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. தற்போது நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்களை வழங்குவதை உறுதி செய்ய மாவட்டம்தோறும் 4 அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இக்குழு ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலர் செயல்படுவார். உறுப்பினர்களாக நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்,கூட்டுறவுத் துறை மண்டல இணை பதிவாளர், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் செயல்படுவார்கள்.
மாதம்தோறும் முதல் மற்றும் 3-வது திங்கள்கிழமைகளில் இந்த குழு கூடி, நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதையும், சரியான நேரத்தில் மக்களுக்கு பொருட்கள் கிடைக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து விவர அறிக்கையை உணவு வழங்கல்ஆணையருக்கு அனுப்புமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago