ஓசூர்: அஞ்செட்டி அருகே சாலையில் சென்ற அரசுப் பேருந்தை ஒற்றை யானை பின்தொடர்ந்து துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அஞ்செட்டி வனச்சரகம் குந்துக்கோட்டை காப்புக்காட்டில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை சுற்றி வருகிறது. ஒற்றை யானை இரவு நேரத்தில் உணவு தேடி காப்புக்காட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே ஒற்றை யானை நேற்று காலை அஞ்செட்டி செல்லும் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற அரசுப் பேருந்தை பின் தொடர்ந்து சென்று சிறிது தூரம் வரை துரத்திச்சென்றது. இதனால், பயணிகள் அச்சம் அடைந்தனர். யானை பேருந்தை துரத்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இநிலையில், ‘அஞ்செட்டி வனச்சரகத்தையொட்டியுள்ள கிராம மக்கள் இரவு நேர காவல் பணி, கால்நடை மேய்ச்சல், விறகு சேகரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்’ என வனத்துறை எச்சரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago