புதிய வகை கார்களை தயாரிக்க உள்ளது; நிசான் தொழிற்சாலை மூடப்படவில்லை: ஓபிஎஸ்ஸுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஒரகடத்தில் உள்ள நிசான் கார் தொழிற்சாலை புதிய வகை கார்களை உற்பத்தி செய்ய உள்ளது. எனவே, தொழிற்சாலை மூடப்படும் என்றும், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுவது உண்மைக்கு மாறானது என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

‘சென்னைக்கு அருகே உள்ள நிசான் கார் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு, தொழிற்சாலை மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் பெருமளவு வேலை இழப்பு, தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு வர உள்ளது’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு மீது ஏதாவது ஒரு வகையில் குற்றம் சுமத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவரது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பயணிகள் கார், எரிவாயு டீசல் இன்ஜின், கியர் பாக்ஸ் போன்றவற்றை உற்பத்தி செய்யும் வகையில் கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் சென்னை அருகே ஒரகடம் தொழில் பூங்காவில் ரெனால்ட் நிசான் நிறுவனத்துக்கு 610 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிறுவனமும் கடந்த 2010 ஜன.1-ம் தேதி திமுக ஆட்சியின்போதே தனது வணிக உற்பத்தியை தொடங்கி இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு உள்நாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பல்வேறு ரக பயணியர் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.

உலக அளவில் 15-க்கும் மேற்பட்ட ஏற்றுமதி சந்தைகளுக்கான சேவைகளையும் வழங்கி வருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனம் தனது 50 ஆயிரமாவது மேக்னைட் எஸ்யூவி ரக காரை வெற்றிகரமாக தயாரித்துள்ளது.

இந்நிலையில், தனது தயாரிப்பு கார்களை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சீர்திருத்தும் நோக்கில், டாட்சன் வகை கார்களின் உற்பத்தியை குறைத்துக்கொண்டு, புதிய வகை கார்களை உற்பத்தி செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய சந்தை நிலவரப்படி செமி கண்டக்டருக்கு தட்டுப்பாடு நிலவினாலும், உற்பத்தியை சீராக வைத்திருப்பதாகவும், உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளுக்கான தேவைகளை ஒரகடம் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களைக் கொண்டே நிறைவு செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தனது செயல்பாடுகளை வெற்றிகரமாக தொடர்ந்து மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளதாகவும், ரெனால்ட் நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, ரெனால்ட் நிசான் தொழிற்சாலை மூடப்படும் சூழல் உருவாகும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கூற்று முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. தொழிற்சாலை தொடர்ந்து இயங்கும் சூழலில், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் என்று கூறுவதும் உண்மைக்கு மாறானது.

அதிமுக ஆட்சியில் நோக்கியா கைபேசி தொழிற்சாலை மூடப்பட்டதும், பல ஆயிரம் பேர் வேலை இழந்ததும் மறுக்க முடியாத உண்மைகள். தமிழகத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க விரும்பிய கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடைசியில் அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு சென்று தொழில் தொடங்க வேண்டிய நிலை உருவானதும் அதிமுக ஆட்சியில்தான்.

முதல்வரின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் எவ்வித குறைவும் இன்றி தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. முதல்வர் மீதுள்ள நம்பிக்கையால், உலகின் பெரும் நிறுவனங்களின் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்