காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயன்பாடின்றி கிடந்த கட்டிடத்தைச் சீரமைத்து மாதிரி நூலகம் அமைத்த தலைமை ஆசிரியரை மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 597 மாணவர்கள் படிக்கின்றனர். 27 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு 2020 நவம்பரில் தலைமை ஆசிரி யராக பிரிட்டோ என்பவர் பணியில் சேர்ந்தார். அதன்பிறகு மாண வர்களின் எண்ணிக்கையை அதி கரிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் மாணவர்களிடம் புத்தகம் வாசிக் கும் பழக்கத்தை ஏற்படுத்த, பள்ளி வளாகத்தில் பயன்பாடின்றி இருந்த கட்டிடத்தைச் சீரமைத்து நூலகத்தை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் தனது சொந்த செலவில் ஒரே சமயத்தில் 40 மாணவர்கள் அமரும் வகையில் இருக்கைகள், மேஜைகளை ஏற்படுத்தினார்.
இந்த நூலகத்தை ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், ஊராட்சித் தலைவர் சுப்பையா ஆகியோர் நேற்று திறந்து வைத்து தலைமை ஆசிரியரை பாராட்டினர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் பிரிட்டோ கூறியதாவது: நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் மாணவர் வாழ்வின் கரடு முரடான பாதைகளை செம்மையாக மாற்றும். இக்காலகட்டத்தில் மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் திறன் வெகுவாகக் குறைந்து விட்டது. அதனை மேம்படுத்தும் வகையில் இந்த நூலகத்தை வாங்கினோம். நூலகம் 720 சதுரடியில் அமைக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட ரூ.3 லட்சத்தில் கட்டிடத்தைச் சீரமைத்தோம். மேலும் இருக்கைகள், மேஜைகள், ரேக்குகள், டைல்ஸ், பெயின்ட் போன்றவைக்கு ரூ.1 லட்சம் செலவானது. நூலகத்தில் 6,000-க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 45 நிமிடங்கள் நூலக நேரம் ஒதுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago