சிவகங்கை மதிமுக செயலர் செவந்தியப்பன் நீக்கம் ஏன்? - பரபரப்பான பின்னணி தகவல்

By செய்திப்பிரிவு

வைகோவுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கிய சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் அக்கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக உருவானதில் இருந்து வைகோவுடன் இருந்தவர் செவந்தி யப்பன். தொடர்ந்து சிவகங்கை மாவட்டச் செயலாளராக இருந்த அவர் 1996, 2001-ல் திருப் பத்தூரிலும், 2006-ல் சிவகங் கையிலும், 2016-ல் காரைக்குடி தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால் அத்தொகுதி திமுக கூட்டணியில் இந்திய கம்யூ னிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டதால் தலைமை மீது அதிருப்தியில் இருந்தார். மேலும் அவர் கட்சிக் கூட்டங்களையும் புறக்கணித்தார்.

இந்நிலையில் மார்ச் 21-ம் தேதி சிவகங்கையில் செவந்தியப்பன் தலைமையில் விருதுநகர் மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாகக் கூறித்தான் மதிமுக பிரிந்தது. ஆனால், தனது மகனை தற்போது துணைச் செயலா ளராக்கியுள்ளார். கட்சியின் கொள் கைக்கு விரோதமாக வைகோ செயல்படுகிறார். இதனால் இனி வைகோவுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம். மதிமுகவை கலைத் துவிட்டு திமுகவுடன் இணைக்க வேண்டும், என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் ஒரு மாதம் கழித்து மூவரையும் மதிமுகவில் இருந்து வைகோ தற்காலிக நீக்கம் செய்துள்ளார். இதுகுறித்து `இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு செவந்தியப்பன் அளித்த பேட்டி:

வைகோவுக்காக 28 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மதிமுகவில் உழைத்தேன். ஆனால், அவர் தனது மகனுக்காக என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதை வைகோ கொடுத்த பரிசாகக் கருதுகிறேன்.

அவர் கட்சிக் கொள்கைக்கு விரோதமாகவும், சர்வாதிகாரப் போக்குடனும் செயல்படுகிறார். அவர் நினைத்ததைச் சாதிக்க பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்தவர்களை நீக்கிவிட்டு தனக்கு வேண்டியவர்களை நியமித்து வருகிறார்.

கட்சியின் சட்ட திட்டத்தை மீறி பொதுவெளியில் செயல்பட்டதாகக் கூறி, ஏப்.5-ம் தேதி எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கான பதிலை ஏப்.11-ம் தேதி அனுப்பிவிட்டேன். விளக்கக் கடிதம் குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு பரிசீலிக்கும் முன்பே என்னை நீக்கிவிட்டார்.

விளக்கக் கடிதம் மீது விசாரணை நடத்தாமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது கட்சியின் சட்ட திட்டப்படி செல்லாது. முறைப்படி எனக்கு நீக்கம் தொடர்பாக கடிதம் வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE