தலைமைச் செயலராக இருப்பதால் சிறந்த நூலுக்கான பரிசை ஏற்க முடியாது: இறையன்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தலைமைச் செயலராக இருப்பதால், சிறந்த நூலுக்கான பரிசை ஏற்க முடியாது என்று வெ.இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் வளர்த் துறைச் செயலர் மகேசன் காசிராஜனுக்கு, இறையன்பு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, 2018-ல் வெளிவந்த நூல்கள் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, பரிசு குறித்த விவரங்கள் 2021 பிப்ரவரி 8-ம் தேதி வெளியிடப்பட்டன.

இதில் என் நூலான, ‘மூளைக்குள் சுற்றுலா’ தேர்வு செய்யப்பட்டு, அரசு விழாவில் பரிசு பெற அழைக்கப்பட்டுள்ளதற்கு எனது நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரம், 2021-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எனது படைப்புக்கு, தற்போது நடைபெறும் விழாவில் தலைமைச் செயலராக பரிசு பெறுவது ஏற்புடையதாக இருக்காது. எனவே, எனது நூலுக்கு பரிசு வழங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்