தேர்தலில் நிற்க திராணியில்லாமல் பயந்து ஓடியவர் நாராயணசாமி: அமைச்சர் நமச்சிவாயம் பதிலடி

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரூ.30 லட்சத்தில் புதிய ஆழ் துளை கிணறுகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தொடக்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் நாராயண சாமி வாய் அடக்கத்துடன் பேச வேண்டும். தற்போது யார் நடுத்தெருவில் நிற்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும். 5 ஆண்டுகாலம் முதல்வராக இருந்துவிட்டு, தேர்த லில் நிற்க திராணியில்லாமல் பயந்து ஓடியவர் நாராயணசாமி. 5ஆண்டுகால ஆட்சியில் நாரா யணசாமி என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

தற்போது பிரதமர், உள்துறை அமைச்சரின் ஆசியுடன் புதுச்சேரி யில் திட்டங்களை நிறைவேற்ற தொடங்கியுள்ளோம்.

இந்த வயிற்று எரிச்சலில் தரம் கெட்ட வகையில் நாராயணசாமி பேசுவது கண்டிக்கத்தக்கது. புதுச் சேரியில் நடப்பது பொம்மை ஆட்சியல்ல - மக்கள் ஆட்சி.

முக்கியமாக பிரதமர் மோடியை குறைகூற நாராயணசாமிக்கு தகுதியில்லை. முதல்வராக இருந்த போது மோடியை சந்திக்க சென்றபோதெல்லாம் காங்கிரஸ் துண்டைஎடுத்து விட்டுத்தான் சந்தித்தார். நடிப்பதுதான் அவரது வாடிக்கை என்று குறிப்பிட்டார். காங்கிரஸில் இருந்து விலகிச்சென்று பாஜகவில் இணைந் தோரை, அண்மையில் நாராயணசாமி கடுமையாகவிமர்சித் திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்