அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சித்ததாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக திருவாரூரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பொன்முடி, அப்போதை தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகவும், இந்திய இறையாண்மைக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக அதிமுக நகர செயலாளர் தட்சிணாமூர்த்தி என்பவர் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரில் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டு பொன்முடி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, திருவாரூர் நகர காவல் நிலையத்தில் அமைச்சர் பொன்முடி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்