கோவை: அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பூங்காக்களில், மின்கசிவால் விபத்து ஏற்படுவதை தடுக்க புல் தரையில் மின் விளக்குகள் அமைப்பதை தவிர்க்கலாம் என கோவையைச் சேர்ந்த மின்அமைப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் பிரதீஷ். வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார். இவரது மனைவிசுகன்யா, தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் லக்சன்(11), தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24-ம் தேதி இரவு தாங்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவுக்கு லக்சன் விளையாடச் சென்றார். அப்போது பூங்கா புல்தரையில் இருந்த மின் விளக்குக்கு செல்லும் வயர் துண்டாகி இருந்துள்ளது. அதை மிதித்ததில், மின்சாரம் தாக்கி லக்சன் உயிரிழந்தார். சிறுவனின் உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், இதுபோன்ற மின் விபத்துகளை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து கோவையைச் சேர்ந்த மின்னமைப்பு ஆலோசகர் பி.பி.சுப்பிரமணியன் கூறியதாவது: ‘ரெசிடுயல் கரண்ட் சர்க்கியூட் பிரேக்கர்’ (ஆர்சிசிபி), ‘எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்' (இஎல்சிபி) ஆகிய மின்கசிவு தடுப்பான்கள், மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்கின்றன. இந்த கருவிகள் மின் கசிவு ஏற்பட்ட ஒருசில நொடிகளில்மின்துண்டிப்பு செய்துவிடும். அவற்றை வீடுகள், தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தினால் மின்கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.
இஎல்சிபி, ஆர்சிசிபி கருவிகள் குறைந்தபட்சம் ரூ.1,500 முதல் கிடைக்கும். ஆர்சிசிபி, இஎல்சிபி கருவிகளில், அவை சரியாக வேலை செய்கிறதா என்று சோதனை செய்துகொள்ளும் ‘டிரிப்' பட்டனும் அதிலேயே இருக்கும். அதை 3 மாதங்களுக்கு ஒருமுறை சோதித்து பார்ப்பது அவசியம். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். பழைய மின் இணைப்புகளில் பலர் இஎல்சிபி, ஆர்சிசிபி கருவிகளை பொருத்தாமல் உள்ளனர். அவ்வாறு உள்ள இடங்களில் இந்த உயிர் காக்கும் சாதனங்களில் ஒன்றை நிறுவுவது நல்லது.
புல்தரையில் விளக்கு வேண்டாம்
பூங்காக்களில் விளக்குகள் அமைத்தால், தெரு விளக்குகள் போல உயரமாக அமைக்க வேண்டும். இல்லையெனில், சுவரோடு அந்த விளக்கு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் விளையாடும் பகுதியின் தரை,அழகு புல்தரைகள் போன்றவற்றில் விளக்குகளை அமைப்பதை தவிர்க்கலாம். அப்படியே அமைத்தாலும், டிசி மின் சப்ளை அளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால், மின்கசிவு ஏற்படும்போது சிறிய அதிர்ச்சிஇருக்குமே தவிர, உயிரிழப்பு ஏற்படாது. புல்தரையில் விளக்கு அமைத்தால் அதை தகுந்த பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும்.
வீடுகள், குடியிருப்புகள், பூங்காக்களின் வெளியில் உள்ள தரைப்பகுதியில் பி.வி.சி குழாய்கள் கொண்டு மின் இணைப்பு அளிக்கும்போது, அதில் உள்ள வயரின் மேற்பகுதியை சிவப்பு எறும்புகள் கடித்து உண்ண வாய்ப்புள்ளது. அவ்வாறு உட்கொண்டால், வயரின் உள்ளே உள்ள கம்பி மட்டுமே இருக்கும். அதில், மின்கசிவு ஏற்படலாம். இவ்வாறான இடங்களில் ஆர்மர்டு கேபிளைத்தான் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மின்கசிவு ஏற்படாது.
ஒவ்வொரு வீட்டிலும் சரியான எர்த் அமைப்பது மிகவும் அவசியம். அதன்மூலமும் உயிரிழப்பை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு எட்டாதஉயரத்தில் சுவிட்ச், பிளக்குகளை அமைக்க வேண்டும். சுவரின் உள்ளே உள்ள பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வயர்களுடன் கூடிய பி.வி.சி குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தால் அப்பகுதிகளில் வெளியே ஆணி அடிக்கக்கூடாது. புதிதாக வீடு கட்டுபவர்கள், சுவருக்கு தண்ணீர் அடிக்கும்போது, அவை மின்கம்பியில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவறினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago