கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிச் செல்லாதிருந்த 9,852 மாணவர்கள் மீண்டும் பள்ளி நோக்கி பயணம்: 1,058 இடைநின்ற மாணவர்களை தேடும் ஆசிரியர்கள்

By ந.முருகவேல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில், பள்ளிச் செல்லா நிலை யில் இருந்த 9,852 மாணவர்கள், மாவட்ட ஆட்சியர்களின் முயற்சி யால் மீண்டும் பள்ளியை நோக்கி பயணித்துள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டு பரவியகரோனா தொற்றுக் காரணமாகமுழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப் பட்டது.கல்வி நிலையங்கள் ஒன்றரை ஆண்டுகளாக முழுமை யாக மூடப்பட்டன. இதனால் பலமாணவர்களின் இயல்பு நிலைமாறியது. குடும்பத்தின் நிலைக் கருதி கிராமப்புற மாணவர்கள் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. சில மாணவர்கள் தங்கள்சொந்த ஊருக்குத் திரும்புவதும், புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தங்களது இருப்பிடத் திற்கே செல்லும் நிலை உருவானது. இதனால் மாணவர்களும் தங்களது படிப்பை பாதியிலேயே விட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டன. தற்போது வழக்கம் போல் பள்ளிகள் செயல்படத் தொடங்கியிருக்கிறது. தற்போது பள்ளிகளுக்கு மாண வர்கள் வருகையை அடுத்து, விடுபட்ட மாணவர்கள் பற்றிய கணக்கெடுப்பை மாநில பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டது. இதன் மூலம் மாநில அளவில், மழலைப் பள்ளி முதல் மேல் நிலைப் பள்ளி வரையில் 1 லட் சத்து 90 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்றலில் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் பள்ளிக்குத் திரும்பி யுள்ளனர்.

அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மாணவர்கள் இடைநிற்றலாகி இருப்பதும் தெரியவந்தது. இதன் படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,806 பள்ளிகளில் 3,24,508 மாணவர்கள் பயின்று வந்தனர். இதில் 11,100 மாணவர்கள் இடைநிற்றலாகி இருப்பது கண்டறியப் பட்டது. இதற்கான பட்டியலை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில், சில பள்ளிகளில் மாணவர்களின் பெயர்கள் இருமுறை பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவைகள் நீக்கப்பட்டன. இந்நிலையில், 5279 பேர் பள்ளிச் செல்லா மாணவர்கள் என உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா தலைமையில் குழுஅமைத்து மாணவர்களை பள் ளிக்கு அழைத்துவர முயற்சி மேற்கொள்ளப்பட்டன. இதன் காரண மாக 5,016 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 263 இடைநின்ற மாணவர்களை கண்டுபிடிக் கவும், அவர்களை மீண்டும் பள் ளிக்கு வரவழைக்கும் பணியை கல்வித்துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 1,175 பள்ளிகளில் 2,87,981 மாணவர்கள் பயின்று வந்த நிலையில், 7,563 மாணவர்கள் பள்ளிச் செல்லாநிலையில் இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியல் ஆய்வு செய்ததில், 5,811 மாணவர்கள் நீண்டகால விடுப்பு, குறுகிய கால விடுப்பு, வேலைக்குச் செல்லுதல், பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாத நிலையில் இருப் பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழுஅமைத்து வீடு வீடாக சென்று பெற்றோரை சமரசம் செய்து, மாணவர் களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியின் காரணமாக 4,836 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்பியுள்ளனர். மேலும் 795 இடைநின்ற மாணவர்களை கண்ட றிந்து பள்ளிக்கு அழைத்து வரும் முனைப்பில் ஆசிரியர் குழு ஈடு பட்டுள்ளது.

இதற்கிடையே விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாகமொத்தம் 9,852 மாணவர்கள் மீண் டும் பள்ளிக்குத் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE