குற்றவியல் வழக்கு விசாரணையின்போது குற்றச்சாட்டு புனைதலை வழக்கறிஞர் மீது சுமத்தக்கூடாது: கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

By ஆர்.பாலசரவணக்குமார்

குற்றவியல் வழக்கு விசாரணை யின்போது குற்றச்சாட்டு-புனைதல் என்பது நீதிமன்றங்களின் முதன்மை யான பணி. அதை வழக்கறிஞர்கள் தலையில் சுமத்தக்கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதி மன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

தருமபுரியில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த அதிமுக உட்கட்சி தேர்தலில் ஏற்பட்ட மோதலில் நகர மாணவர் அணி துணைச் செயலா ளரான வீரமணி கொலை செய்யப் பட்டார். இந்த வழக்கை வேகமாக நடத்தி முடிக்கக் கோரி கே.ரவி என்பவரும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி என்.மது என்பவரும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

அரசு தரப்பு சாட்சிகள் இவ்வழக்கில் 18-வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மது, சம்பவ இடத்தில் இருந்ததாக சாட்சியம் அளித்துள்ளனர். மேலும் மது மீதான குற்றச்சாட்டுக்கு தகுந்த முகாந்திரம் இருப்பதாக கருதியே, அவர் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்ககோரிய மனுவை தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அந்த உத்தரவில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை. எனவே வழக்கில் இருந்து விடுவிக்ககோரிய மதுவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேலும் இந்த விசாரணையை அமர்வு நீதிமன்றம் 4 மாதங்க ளுக்குள் விசாரித்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்கு மாவட்ட போலீஸ் எஸ்பி மற்றும் இரு தரப்பு வழக்கறிஞர்களும் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பொதுவாக கீழமை நீதிமன்றங் களில் குற்றச்சாட்டு-புனைதல் என் பது அரசு தரப்பு வழக்கறிஞர்களின் வேலை என்பது போன்ற நிலைதான் உள்ளது. நீதிமன்ற பணிகளை அவர்கள் மீது சுமத்தக்கூடாது. குற்றவியல் நடைமுறைச் சட்டத் தின்படி குற்றச்சாட்டுகள் சரியாக புனையப்பட்டுள்ளதா? அதில் ஏதும் குறைபாடுகள் உள்ளதா? அவை எவ்வாறு புனைய வேண்டும்? அதன் சட்ட சொல்நடை எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது போன்ற முக்கி யப்பணிகளை செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் நீதிமன்றங் களுக்குத்தான் உள்ளது. மேலும், குற்றச்சாட்டுகளை புனையும்போது அரசு மற்றும் எதிர் தரப்புக்கு சம மான வாய்ப்புகளை கீழமை நீதிமன் றங்கள் வழங்கி அவர்களை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்