ஆளுநர் மாளிகைக்கு அவப்பெயர் வரும் முன் எழுவர் விடுதலை கோப்பில் கையெழுத்திடுக: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆளுநர் மாளிகையின் மாண்பை காக்க பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "பேரறிவாளன் வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காததற்காக தமிழக ஆளுநர் மாளிகையை கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆளுநரின் நிலை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கண்டித்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம் இப்படி விமர்சிக்கும் நிலையை தமிழக ஆளுநர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது. 7 தமிழர் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும். ஆளுநர் 4 நாட்களில் சரியான பதிலளிக்கவில்லை என்றால் பேரறிவாளனை உச்ச நீதிமன்றமே விடுதலை செய்யக்கூடும்.

பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தால் அது ஆளுநர் மாளிகைக்கு அவப்பெயர் தேடித்தரும். அந்த நிலையைத் தவிர்த்து ஆளுநர் மாளிகையின் மாண்பை காக்க பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்