போடி: தேனி மாவட்டம், போடி எஸ்எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(32). தனியார் மருந்தகத்தில் மேலாளராக உள்ளார்.
நேற்று முன்தினம் இவரது வங்கிக்கணக்கில் ரூ.4 லட்சம் வரவு வைக்கப்பட்டதாக மொபைல் போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதைப் பார்த்து குழப்பம் அடைந்த அவர் இதுகுறித்து வங்கிக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் அப்பணத்தை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான கடிதத்தை கொடுத்தார். இதைத் தொடர்ந்து அப்பணம் சரியான கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
போடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் இவரது நற்செயலை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். போடி நகர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி இதை வெங்கடேசனிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago