சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், மின் கசிவாலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இதில் 2-வது டவரின் பின்புறம் உள்ள சர்ஜிக்கல் உபகரணங்கள் வைக்கும் அறையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெளியே எடுத்துச் செல்லும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
» தஞ்சாவூர் மின் விபத்து குறித்து புலன் விசாரணை: மத்திய மண்டல ஐ.ஜி. தகவல்
» வனப்பரப்பை பெருக்க களப் பணியாளர் எண்ணிக்கையை அதிகரித்திடுக: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், "மருத்துவமனையிம் நியூரோ வாட்டில் தீ விபத்து ஏற்பட்டள்ளது. விபத்து ஏற்பட்ட உடன் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை மீட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறையின்ர் தொடர்ந்து தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். விரைவில் தீ கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். யாரும் எதிர்பார்க்காத முறையில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட உடனே சிகிச்சை பெற்றவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 3 பேர் ஐசியூவில் இருந்தனர். அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.10 ஆக்சிஜன் சிலிண்டர்களும் மீட்கப்பட்டுள்ளம. உயிரிழப்பு எதுவும் பதிவாகிகவில்லை" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago