தி.மலை விடுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் முறைகேடுகள் கண்டுபிடிப்பு: பொறுப்பாளர்கள் மீது விரைவில் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 102 அரசினர் மாணவ, மாணவிகள் விடுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் முறைகேடுகள் வெளிச் சத்துக்கு வந்துள்ளதால், சம்பந்தப் பட்ட பொறுப்பாளர்கள் மீது நட வடிக்கை எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட் டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் மிகவும் பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை கட்டுப் பாட்டில் 102 அரசு மாணவ, மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் தரம் இல்லை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தது. இதையடுத்து ஆட்சியர் பா.முரு கேஷ் தலைமையிலான குழுவினர் 102 விடுதிகளில் நேற்று முன் தினம் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அதிரடி ஆய்வு நடத்தினர்.

இதில், போளூரில் உள்ள அரசினர் மாணவ, மாணவிகள் விடுதியை ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும்போது, “102 அரசினர் மாணவ, மாணவிகள் விடுதிகளை உயர் அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மாணவர் களுக்கு வழங்கப்படும் உணவு முறை, உணவு பொருட்களின் இருப்பு விவரம், பதிவேடு, மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களது கல்வி தரம், குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மின்விசிறிகள் மற்றும் மின் சாதனங்களின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில், உயர் அலுவலர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தி.மலை மாவட்டத்தில் உள்ள 102 அரசினர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பல்வேறு முறைகேடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாணவர் களுக்கு வழங்கப்படும் உணவில் தரம் இல் லாதது, கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்காமல் இருந்தது, மின்விசிறிகள் சரியாக இயங்காதது ஆகியவை வெளிச் சத்துக்கு வந்துள்ளது.

மேலும் மாணவர்களின் எண்ணிக்கையும் - தயாரிக்கப்படும் உணவுகளின் அளவில் வேறுபாடு இருந்துள்ளது. அதேநேரத்தில் உணவு தயாரிப்பதற்கான மளிகை பொருட்களின் அளவான பதிவேட்டில் முழுமையாக குறிப் பிடப்பட்டிருந்ததும், ஒரு சில விடுதிகளில் பொறுப்பாளர்கள் இல்லாததும், சரிபாதி அளவுக்கு மேல் மாணவர்கள் இல்லாததும் தெரியவந்தது.

இது குறித்து உயர்அலுவலர்கள், தங்களது ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் நேற்று (26-ம் தேதி) சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கையை பரிசீலனை செய்யும் பணி நடைபெறுகிறது.

அதன்முடிவில் முறைகேடு நடைபெற்றுள்ள விடுதிகளின் பொறுப்பாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE