அறநிலையத் துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ரூ.15 கோடியில் புதிய கட்டிடம்: ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2021-22 நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் ரூ. 15 கோடி செலவில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தலைமையிட அலுவலக இடப்பற்றாக்குறையை களைவதற்காக ஆணையர் அலுவலக வளாகம் விரிவுபடுத்தப்படுகிறது. புதிதாக கட்டப்படும் கட்டிடம், 39,913 சதுர அடியில் 4 தளங்களுடன் அமைய உள்ளது. இதில் கோயில்களின் புத்தக விற்பனை நிலையம், வரவேற்பறை, உதவி ஆணையர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், பொறியாளர்களுக்கான அறைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் உணவகம் என நவீன வசதிகள் உருவாக்கப்படுகிறது.

பணிநியமன ஆணை

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் 5 ஆண்டுகளுக்குமேல் தகுதியான பணியாளர்களின் பணியை ஆய்வு செய்து, வரன்முறை செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி, நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள பணியாளர்களின் பணி விவரங்களை ஆய்வுசெய்து, தேவையானவர்களுக்கு வயது, கல்வித் தகுதியில் விலக்கு அளித்து பணி வரன்முறை செய்யும் வகையில் முதல்கட்டமாக 425 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதில், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் 12 பேர், இதர பணியாளர்கள் 14 பேர், கருணை அடிப்படையில் 6 பேர், நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி ஒருவர் என 33 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டப்பேரவை உறுப்பினர் நா.எழிலன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவுமாரமடாலயம் குமரகுருபரசுவாமிகள், அறநிலையங்கள் துறை செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டது.

கோயில்களின் புத்தக விற்பனை நிலையம், வரவேற்பறை, உதவி ஆணையர்கள் அறைகள், உணவகம் என நவீன வசதிகள் உருவாக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்