'வாக்களித்த மக்களுக்கு மின்தடையை பரிசாக வழங்கிய திமுக' - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ‘‘வாக்களித்த மக்களுக்கு மின்தடைய திமுக அரசு பரிசாக வழங்கியிருக்கிறது, ’’ என்று முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் மின் மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த 11 மாதத்தில் வாக்களித்த மக்களுக்கு மின்தடையை பரிசாக வழங்கி உள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நாங்கள் பேசியபோது அதற்கு மின்சாரத்துறை அமைச்சர் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினார் ஆனால் தற்போது கோட்டைவிட்டார். அதுமட்டுமல்லாது சட்டமன்றத்தில் சித்திரைத் திருவிழா குறித்து நாங்கள் பேசியபோது அனைத்து ஏற்படும் தயார் என்று அமைச்சர் பதில் கூறினார்.

ஆனால் அன்றைக்கு சரியாக ஏற்பாடு செய்யாததால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு வழங்கிய நிவாரணம் கூடுதலாக வழங்க வேண்டும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கூறினோம். ஆனால் இதுபோன்ற மக்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண பேசும் போதெல்லாம் அரசு தொடர்ந்து மெத்தன போக்கு காட்டு வருகின்றது. இந்த 11 மாத கால ஆட்சியில் திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்