தயவு செய்து லஞ்சம் கொடுக்காதீர்கள் என்னும் எச்சரிக்கை விழிப்புணர்வு வாசகங்களை அலுவலகத்தில் எழுதி வைத்து, அதன்படி நேர்மையாகப் பணிபுரியும் காரைக்குடி கிராம நிர்வாக அலுவலரை பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
காரைக்குடி அருகே உள்ள உ.சிறுவயல் பகுதி கிராம நிர்வாக அலுவலர் ரா.அருள்ராஜ் (26). இவர், தனது அலுவலகத்தில் “தயவு செய்து லஞ்சம் கொடுக் காதீர்கள்” என்னும் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வைத் துள்ளார். அரசுப் பணி செய்வ தற்கு யாரும், யாருக்கும் பணம் தரவேண்டியதில்லை என்ப தையும் வலியுறுத்தி வருகிறார். இதற்காக “லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து” என்னும் கொள்கையுடன் பணியாற்று வதால் ஏழை, எளிய மக்கள், கல்லூரி மாணவர்களிடையே நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.
கல்லல் அருகே உள்ள திருத்திப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரனின் மகனான இவர் மெரைன் இஞ்ஜினீயரிங் படித்துவிட்டு கப்பலில் பணி யாற்றினார். அப்போது தந்தையின் மரணம் இவருக்கு சோகத்தை ஏற்படுத்தியது. தந்தையின் மறைவுக்குப் பின் இவருக்கு அரசு வாரிசு வேலை கிடைத்துள்ளது.
காரைக்குடி தாலுகா இலுப் பகுடியில் 2014-ல் கிராம நிர் வாக அலுவலராகப் பணியில் சேர்ந்தார். அன்று முதல் நேர்மை யுடன் பணியாற்றி வருகிறார். இடமாறுதலில் தற்போது உ.சிறுவயலில் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார்.
முதியோர் உதவித் தொகை, விவசாயிகளுக்கு பட்டா மாறுதல், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் பயனா ளிகளுக்கு சல்லிக்காசு செலவின்றி வழங்கி வருகிறார்.
நேர்மையாகப் பணிபுரியும் இவரை வயதான முதியவர்கள், ஏழை விவசாயிகள், கூலித் தொழி லாளர்கள் மனதார பாராட்டிச் செல்கின்றனர். ஆனால், கல்லூரி மாணவ, மாணவியர் நேர்மையான விஏஓ என சமூக வலைதளங்களில் பாராட்டி தனது நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அருள்ராஜ், `தி இந்து’ விடம் கூறியதாவது:
கல்லலில் உள்ள பள்ளியில் படிக்கும்போது எனது ஆசிரியர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என நீதிபோதனை வகுப்புகள் நடத்துவர். அப்போது முதல் நாமும் அரசு வேலைக்குச் சென்றால் நேர்மையாகப் பணி யாற்றி அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனது தந்தையின் திடீர் மறைவால் வாரிசு அடிப்படையில் அரசு வேலை கிடைத்தது. அன்று முதல் நேர்மையோடு பணியாற்றி வருகிறேன். லஞ்சம் கொடுக்க முற்படுவோரை எச்சரிக்கவும், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த வாசகங்களை எழுதி வைத்துள்ளேன் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago