சுகாதார மானியக் கோரிக்கையில் தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு போராட்டக் குழு கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின்போது அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சுகாதாரத் துறையில் நாட்டிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஆனாலும், அதற்கான பங்களிப்பை வழங்கும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா பேரிடரில் ஓய்வின்றி பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களின் வலிகள், உணர்வுகளை அரசு புரிந்துகொள்ள மறுப்பதுதான் வேதனையாக உள்ளது.

கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசிடம் இருந்து இதுவரை நிவாரணம் தரப்படவில்லை. கரோனாவால் மறைந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யா கண்ணீருடன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த பிறகும், அவருக்கு கல்விக்கேற்ற அரசு வேலை வழங்கப்படவில்லை.

சட்டப்பேரவையில் வரும் 29-ம் தேதி நடக்க உள்ள சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின்போது, திவ்யா விவேகானந்தனுக்கு அவரது கல்வி தகுதிக்கேற்ற அரசு வேலை மற்றும் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அரசு மருத்துவர்களுக்கு வெளியிட்ட ஊதிய உயர்வு அரசாணை செயல்படுத்தப்படும் ஆகிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மே 18-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்கள் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது வெளியிட்ட ஊதிய உயர்வு அரசாணை செயல்படுத்தப்படும் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்