திருவண்ணாமலை: பாலியப்பட்டு ஊராட்சியில் நேற்று நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சிப்காட் அமைக்க கிராம மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பாலியப்பட்டு கிராமத்தை மையமாக கொண்டு சிப்காட் (தொழிற்பேட்டை) அமைக்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டத்துக்காக 1,200 ஏக்கர் விவசாய நிலம், பல நூறு வீடுகளை கையகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்டங் களாக நடத்தப்பட்ட அவர்களது போராட்டம் 124-வது நாளை எட்டியது.
இந்நிலையில், பாலியப்பட்டு ஊராட்சியில் நேற்று நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், சிப்காட்டுக்கு எதிரான முழக்கம் எதிரொலிக்க செய்தது. கூட்டத் தில் பேசிய கிராம மக்கள், “பாலியப் பட்டு கிராமத்துக்கு சிப்காட் வரும் என தெரியவந்த நாளில் இருந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், எங்களை அழைத்து மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சிப்காட் வரப்போகிறது என்பதால், பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம்.
கிராமத்தை விட்டு ஓட போகிறவர்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது. சுற்றியுள்ள கிராம மக்கள் மதிப்பது இல்லை. இதனால், ஒரு திருமணம் தடைபட்டுள்ளது. விவசாய நிலம் இல்லை என்பதால், பெண் கொடுக்க முன்வரவில்லை. கடன் கொடுக்கவும் மறுக்கின்றனர். நமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது. பல கட்ட போராட்டங்களை நடத்தியும், ஒரு கிராம நிர்வாக அலுவலர் கூட வந்து, ஏன்? என கேள்வி கேட்கவில்லை. ஆட்சியரி டம் மனு கொடுத்தும் பதில் இல்லை. விவசாய நிலங்களை கொடுத்துவிட்டு, எங்கே சென்று நாம் பிழைக்க முடியும்.
விவசாயத்தை அழித்து வேலைவாய்ப்பு கொடுக்க போகிறோம் என்கின்றனர். விவசாயத்தை தவிர நமக்கு வேறு என்ன வேலை தெரியும். நமது கிராமத்துக்கு சிப்காட் வேண்டாம் என ஏற்கெனவே நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது. இப்போது நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். எங்களுக்கு சிப்காட் தேவையில்லை என ஒட்டுமொத்த கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவிக் கிறோம்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago