சென்னை: தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு கடுமையாக உழைத்து வரும் முதல்வர் ஸ்டாலினை மனதார வாழ்த்துகிறேன் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த விழாவில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா: ‘ஓர்ந்து கண்ணோடாது’ என தொடங்கும் திருக்குறள்படி நீதிமன்றங்கள் தங்கள் உரிமையை பாதுகாக்கும் என மக்கள் நம்புகின்றனர். உடனடி காபி, உடனடி நூடுல்ஸ் போல மக்கள் உடனடி நீதி பரிபாலனத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால் நீதித் துறையின் நிலையை மக்கள் உணரவில்லை. நீதித் துறைக்கு சீர்திருத்தம் தேவை.
ஆக்கப்பூர்வமான தீர்வுகள் காணும்போது நீதிபதிகள் சட்டத்தை மட்டும் சார்ந்து இருக்காமல் சமூக உண்மையையும் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
திருமணத்தில் ஓதப்படும் மந்திரங்கள்போல இல்லாமல், வழக்காடிகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வழக்கு விசாரணைகள் இருக்க வேண்டும். நீதிமன்ற விசாரணையில் அந்தந்த மாநில அலுவல் மொழியை பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளில் வழக்காடுவது குறித்து விரைவில் தீர்வு காணப்படும்.
தமிழகத்தில் நீதித் துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வழக்கறிஞர்களின் நலன் காக்கவும் நடவடிக்கை எடுத்து வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது நன்றி, வாழ்த்துகள். தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு கடுமையாக உழைத்துவரும் அவரை மனதார வாழ்த்துகிறேன்.
உச்ச நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன்: இந்திய நீதித்துறைக்கே தமிழகம் முன்னோடி மாநிலமாக செயலாற்றி வருகிறது. கடந்த ஆண்டு 1.33 லட்சம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 1.46 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இது இந்திய அளவில் மிகப்பெரிய சாதனை.
உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்: தமிழகத்தில் சட்டக் கல்வி இயக்குநர் பதவி காலியாக உள்ளது. அப்பதவிக்கு மாவட்ட நீதிபதியை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பால்வசந்தகுமார், முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன், தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜாகுமார், பார் கவுன்சில் உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago