முன்விரோத தகராறில் இரட்டைக் கொலை - தந்தை, 2 மகன்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

By செய்திப்பிரிவு

திருவாரூர்: கொரடாச்சேரியில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, 2 மகன்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

திருவாரூர் மாவட்டம் ஆர்ப்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், கொரடாச்சேரி பிஎம்ஹெச் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகன்கள் மதன்(22), ஸ்ரீதர் ராஜா(19). இருசக்கர வாகனத்தை இரவல் வாங்கிச் சென்றது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், மதன், ஸ்ரீதர் ராஜா ஆகியோரை, அதே காலனியில் வசித்து வந்த ருக்குன் பாட்ஷா(58), இவரது மகன்கள் மன்சூர் அலிகான்(32), மர்ஜித் அலிகான்(31) மற்றும் உறவினர் ஹாஜி முகமது(43) ஆகியோர் 2013-ல் கொலை செய்தனர்.

இதுதொடர்பாக, கொரடாச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ருக்குன் பாட்ஷா உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சாந்தி நேற்று தீர்ப்பளித்தார்.

இதில், குற்றம்சாட்டப்பட்ட மன்சூர் அலிகானுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், ருக்குன் பாட்ஷா, மர்ஜித் அலிகான், ஹாஜி முகமது ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதைஅடுத்து, 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்