கோவை: கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில், நேற்று தொடர்ந்து 3 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்தடை இருந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். பகல் நேரத்தில் கோடை வெப்பத்தில் தவிக்கும் மக்களுக்கு, திடீர் மின்வெட்டு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக, வயதானவர்களும் குழந்தைகளும் புழுக்கத்தில் உறக்கமின்றி தவித்தனர்.
இதுகுறித்து, கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் கூறும்போது, “கோவையைப் பொறுத்தவரை மின் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நகரில் சில இடங்களில் பிரேக்டவுன் இருந்தது. மின்பாதையில் உள்ள பிரச்சினையை சரிசெய்ய இணைப்பை துண்டித்து, சரிசெய்யப்பட்டவுடன் அந்த இடங்களில் மின்விநியோகம் சீரானது. அதை மின்வெட்டு என்று கூற முடியாது. அனைத்து பகுதிகளிலும் வழக்கம்போல மின்விநியோகம் இருக்கும்.”என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago