கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் அறையில் உள்ள சுவரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை அப்பகுதி பாஜக நிர்வாகிகள், பிரதமர் நரேந்திரமோடியின் புகைப்படத்தையும் செயல் அலுவலர் அறையில் பொருத்தினர். இதற்கு பேரூராட்சிக்கு உட்பட்ட திமுக கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமரின் புகைப்படத்தை, வெள்ளலூர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் ஒருவர் அகற்றினார்.
இதையறிந்த பாஜக நிர்வாகிகள், நேற்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரதமரின் புகைப்படத்தை அகற்றிய திமுகவினரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை போத்தனூர் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago