சென்னை: ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 'சிங்கிள் யூஸ்' பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்று டெலிவரி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தமிழக சுற்றுசூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதைத் தடுக்க உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் அவ்வப்போது சோதனைகள் நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கிலும் உயர் நீதிமன்றம் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்துவருகிறது.
இந்நிலையில் டெலிவரி நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட 'சிங்கிள் யூஸ்' பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று கடிதம் எழுதி உள்ளதாக தமிழக சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.
» இந்தியா - இலங்கை கடல்வழி மின்பாதை திட்டத்தை கைவிடுக: ராமதாஸ் வலியுறுத்தல்
» சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு 55 ஆக அதிகரிப்பு: இதுவரை XE திரிபு இல்லை எனத் தகவல்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில்," ஸ்விக்கி, ஜூமோட்டோ, அமேசான், பிளிப்கார்ட், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்டவை ஒருமுறை பயன்படுத்தக்கூடும் 'சிங்கிள் யூஸ்' பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கடிதம் எழுதியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago