திருவள்ளூர் அருகே மின்வெட்டு காரணமாக துணை மின்நிலைய அலுவலகம் சூறை: ஊழியரை தாக்கிய 6 பேருக்கு போலீஸ் வலை வீச்சு

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மணவாள நகரில் மின்வெட்டு காரணமாக துணை மின்நிலைய அலுவலகத்தை பொதுமக்களை சூறையாடி, ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே உள்ள மணவாள நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வந்ததால், முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவும், மணவாள நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு உற்பத்திமற்றும் பகிர்மானக் கழகத்தின் மணவாள நகர் துணை மின்நிலையத்தில் பணியில் இருந்த கள உதவியாளரான குப்பன், மின் சாதனங்களில் ஏற்பட்ட பழுதை சரி செய்து, மின்விநியோகத்தை சீராக வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, துணை மின்நிலைய அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் 6 பேர், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை ஏன் சீர் செய்யவில்லைஎன, அங்கிருந்த இளநிலை பொறியாளர், கள உதவியாளர்களிடம்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமல்லாமல், அவர்கள், அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், நாற்காலி ஆகியவற்றை சேதப்படுத்தினர். இதில் ஒருவர், இரும்பு கம்பியால் கள உதவியாளர் குப்பனின்தலையில் தாக்கினார். இச்சம்பவத்தில் காயமடைந்த குப்பன், சக ஊழியர்களால் மீட்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, மணவாள நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, துணை மின்நிலைய அலுவலகத்தை சூறையாடிய, ஊழியரைத் தாக்கிய 6 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், இச்சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் 15-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் நேற்று மணவாள நகர் துணை மின்நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த மணவாள நகர் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். அப்போது, அவர்கள், “அலுவலகத்தை சூறையாடிய, ஊழியரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, மின் ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்