அரசுப் பள்ளியின் வகுப்பறையில் விஷம் சாப்பிட்டதாக கூறி மாணவர் நாடகம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் அரவிந்தன் என்பவர் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்து வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியர்கள் நடத்திய பாடங்களை கவனித்து வந்துள்ளார். பின்னர், இடைவேளை நேரத்தில், தனது பையில் இருந்து எதையோ எடுத்து சாப்பிட்டுள்ளார். சக மாணவர்கள் அதுபற்றி கேட்க, தான் விஷம் சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகவலை தெரிவிக்க, மாணவர் அரவிந்தனை கோலியனூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மாணவர் அரவிந்தனை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, திடீரென எழுந்து அமர்ந்த அரவிந்தன், தான் விஷம் எதுவும் சாப்பிடவில்லை என்றும் சக மாணவர்களை விளையாட்டாக பயமுறுத்துவதற்காக விஷம் சாப்பிட்டதை போல நடித்து பொய் சொல்லியதாகவும், தான் சாப்பிட்டது அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சத்துமாவு என்றும் கூறினார். மாணவர் அரவிந்தனுக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்