சேலம்: ஒரேமாதத்தில் 34 பேருக்கு பிரசவ சிகிச்சை அளித்து சேலம் தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தமிழக அளவில் சாதனை படைத்துள்ளது.
சேலம் மாநகராட்சியில் உள்ள 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த மார்ச் மாதம் கர்ப்பிணிகள் 81 பேருக்கு பிரசவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 34 பேருக்கு பிரசவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழக அளவில் ஒரேமாதத்தில் அதிக பிரசவ சிகிச்சை அளித்த பெருமை சேலம் தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து, தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் முன்னிலையில், மேயர் ராமச்சந்திரன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் சாரதாதேவி, மண்டலக் குழுத் தலைவர் அசோகன், பொது சுகாதாரக் குழுத் தலைவர் சரவணன், மாநகர நல அலுவலர் யோகனாந்த், மருத்துவர் செந்தா கிருஷ்ணன், உதவி ஆணையர் ரமேஷ்பாபு மற்றும் மாமன்ற கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago