காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நிரவியில் உள்ள ஓஎன்ஜிசி காவிரிப்படுகை நிறுவனத்தின் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலச் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காரைக்காலில் நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத் தலைவர் கே.ஆனந்தன் தலைமை வகித்தார்.
இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியது: ஓஎன்ஜிசி நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அண்மைக்காலமாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் காஸ் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரால் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், ‘‘இந்நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை. அறிவியல் பூர்வமான வகையில் எதிர் கருத்துகள் வைக்கப்படவில்லை. மக்கள் நலனுக்காகவே இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இங்கு தொடர்ந்து இயங்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே இயங்கிய 60 எண்ணெய்க் கிணறுகள் தொழில்நுட்பக் காரணங்களால் தற்போது இயக்கப்படாமல் உள்ளன. அந்தக் கிணறுகளை கூட தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை. புதிதாகக் கிணறுகள் அமைக்க வேண்டும் என்று கேட்கவில்லை.
மக்களின், தொழிலாளர்களின் நலன் கருதி அந்த 60 கிணறுகளை இயக்க அறிவியல் பூர்வமாக மக்களிடம் எடுத்துக் கூறி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என அலுவலர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து களத்தில் போராடும் மற்ற அமைப்புகளின் தலைவர்களிடமும் இந்த விளக்கங்களை எடுத்துக் கூற வேண்டிய கடமை உள்ளது. அந்த முயற்சியை அலுவலர்கள் முன்னெடுத்தால் ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு கல்வி மேம்பாட்டுக்கான நிதியுதவி, தையல் இயந்திரங்கள், 3 சக்கர வண்டி உட்பட ரூ.42 லட்சம் மதிப்பிலான உதவிகள் 446 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
ஓஎன்ஜிசி குழு பொது மேலாளர்கள் சி.ஐ.செபஸ்தியன், எம்.கோபிநாதன் ஆகியோர் பேசினர். தொடர்பு அதிகாரி எஸ்.ரத்தினம் வரவேற்றார். சங்க செயலர் எஸ்.கனகாதரன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago