பள்ளிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பான கழிப்பறைகள்: சென்னை மாநகராட்சி திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் கழிவறைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகரை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக மாற்ற நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையில் உள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமிரா அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கழிவறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதன்படி 6-வது மண்டலத்தில் மொத்தம் 147 கழிவறைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மாநகராட்சி உள்ள பெண் குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறைகள் சேதமடைந்து முறையான பராமரிப்பு இல்லாமலும் உள்ளன. இந்த கழிப்பறைகள் அனைத்தும் நிர்பயா நிதியின் கீழ் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எப்போதும் போல் கட்டப்படும் கழிவறைகளாக இல்லாமல் மிகவும் பாதுகாப்பான கழிவறைகளாக இவை அனைத்தும் புதுபிக்கப்படும். குறிப்பாக, பெண்கள் மட்டும் பயிலும் பள்ளிகளுக்கு முக்கியதுவம் அளித்து கழிவறைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்