நாமக்கல்: வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.76.50 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவருக்கு ராசிபுரம் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர் குணசீலன் (65). இவர் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜாவின் அண்ணன் மருமகன். இவர் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் மீது ராசிபுரம் காவல் நிலையத்தில் ரூ.76.50 லட்சம் பண மோசடி புகார் செய்தார்.
அந்தப் புகாரில், ''சத்துணவு திட்டத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 15 பேர் என்னிடம் ரூ.76.50 லட்சம் பணம் அளித்தனர். அந்த தொகையை அமைச்சர் சரோஜாவிடம் வழங்கினேன். எனினும், அவர் வேலை எதுவும் வாங்கித் தரவில்லை'' என குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகார் தொடர்பாக நாமக்கல் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகிய இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சனும் மனு தாக்கல் செய்தனர். ராசிபுரம் நீ்திமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறும்படி உயர் நீதிமன்றம் உத்திரவிட்டது. இதையடுத்து, முன்னாளர் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகிய இருவரும் ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதையடுத்து, இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி மறு உத்தரவு வரும் வரை வாரந்தோறும் சனிக்கிழமை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும்படி உத்தரவிட்டப்பட்டது. முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார் அளித்த குணசீலன் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago