ஓர் ஆண்டில் சென்னை புறநகர் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த, காயம் அடைந்தோர் எண்ணிக்கை 200+

By செய்திப்பிரிவு

சென்னை: 2021 - 2022 ஓராண்டு காலக்கட்டத்தில் சென்னை புறநகர் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200-க்கும் மேலாக பதிவாகியுள்ளது என்று தெற்கு ரயில்வே வெளியிட்ட தரவு தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து, படிகளில் பயணிப்பதைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் ரயிலிகளில் படியில் தொங்கி கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்வது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை தடுக்க தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், படியில் தொங்கிச் சென்று கீழே விழுந்து மரணம் அடையும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேதான் உள்ளன. கடந்த மார்ச் மாதம் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் படியில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தார்.

இந்நிலையில், படியல் தொங்கி பயணம் செய்தாலோ, தண்டவாளங்களில் செல்ஃபி எடுத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை புறநகர் ரயில்களில் படியில் தொங்கி பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. படியில் நின்று பயணம் செய்பவர்களை கண்டறிய ரயில்வே காவல் துறையின் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 2021 - 2022 ஆம் ஆண்டில் படியில் பயணம் செய்வது தொடர்பாக 767 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 200-க்கு மேற்பட்டோர் ரயிலில் இருந்து கீழு விழுந்து மரணம் அல்லது அதிக காயம் அடைந்துள்ளனர்.

படியில் பயணம் செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தண்டவாளங்களில் செல்ஃபி எடுத்தப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். இதன்படி விதிகளை மீறி பயணம் செய்பவர்கள் மீது கடும் நவடடிக்கை எடுக்கப்படும். தினசரி 10 முதல் 15 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்