பேருந்து படிக்கட்டில் தொங்கிச் செல்லும் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதாக புகார்கள் எழுந்தன. இதை தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

இதையடுத்து, போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரட்கர் தலைமையிலான போக்குவரத்து போலீஸார் தினமும் காலை, மாலை நேரங்களில் பேருந்து வழித்தடங்களில் சோதனை நடத்தி, படியில் பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை பெருநகரம் முழுவதும் 18-ம் தேதி மாநகர பேருந்துகளில் கண்காணிப்பை போக்குவரத்து போலீஸார் அதிகப்படுத்தினர். படிக்கட்டில் பயணம் செய்த 111 பள்ளி மாணவர்கள், 43 கல்லூரி மாணவர்களை பிடித்து, பேருந்துகளில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். இதுகுறித்து அந்த மாணவர்களின் பெற்றோருக்கும், சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் மூலமாக தகவல் தெரிவித்தனர்.

படிக்கட்டில் தொங்கிச் செல்வதால் உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றியும் மாணவர்களுக்கு போலீஸார் அறிவுரை வழங்கினர். பிள்ளைகளை பள்ளிகளுக்கு ஏற்றிக்கொண்டு அவசர அவசரமாக செல்லும் பெற்றோரை நிறுத்தியும் அறிவுரை வழங்கினர்.

மேலும், பள்ளி நேரத்தில் ஒருவழிப் பாதையில் பயணம் செய்தவர்கள், ஆட்டோக்களில் அதிக மாணவர்களை ஏற்றிய ஓட்டுநர்கள் உட்பட 60 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, “இனிவரும் காலங்களில் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் மாணவர்கள் மீது உரிய வழக்குகள் பதிவு செய்யப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அவர்களது பெற்றோர், பிள்ளைகளை அழைத்துச் செல்லும் வாகனஓட்டிகள் ஆகியோர் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி, மாணவர்கள் விபத்தில்லா பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும், அதன்மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்