சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பூஜ்ய நேரத்தின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, ‘சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது அச்சத்தை எற்படுத்தியுள்ளது. இதுதவிர, ஜிஎஸ்டி இழப்பீடு வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளதால், மாநிலங்கள் இழப்பைச் சந்திக்க நேரிடும்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை 5 ஆண்டுகளுக்குள் முடித்துக் கொள்ளாமல், கூடுதலாக வழங்க வேண்டும் என்றுமத்திய நிதியமைச்சர், பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், இழப்பீட்டுத் தொகைவழங்குவதை நீட்டிக்கும் எண்ணம் இருப்பதாக எந்த தகவலும் வரவில்லை.
வரி வருவாயை சீரமைக்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில் ஒன்று நிலைக்குழு. இக்குழுவுக்கு சீர்திருத்தம் செய்யும் பணிகள் மட்டுமே. அதில் என்னைக்கேட்காமலேயே மத்திய நிதியமைச்சர் என்னை நியமித்துள்ளார்.
மற்றொரு குழு, வரியைத் திருத்தியமைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 3 மாதங்களுக்குள் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜிஎஸ்டி கவுன்சில் இதுவரை கூடவில்லை.குழுவும் அறிக்கை அளிக்கவில்லை.
தற்போது எத்தனையோ வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்றைய சூழலில் வருவாய் குறைவாகத்தான் வருகிறது. அதைத் திருத்தியாக வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசும்,ஜிஎஸ்டி கவுன்சிலும் உள்ளன. அதேநேரம், இழப்பீட்டுத் தொகை வழங்குவதை நீட்டிக்க எந்த முடிவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
எனவே, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அமைச்சருக்கும், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் இது குறித்து கடிதம் எழுதி, தெளிவான விளக்கம் கேட்கப் போகிறேன். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago