திருநெல்வேலி: தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி - நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர் - ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலைகள் நடைபெறவுள்ளது. எனவே, இப் பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில்(எண் 22627/22628) இன்று முதல் வரும்29-ம் தேதி வரை திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இன்று முதல் 28-ம் தேதி வரைதாம்பரத்திலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா விரைவு ரயில்(எண் 20691) திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில் நாளை (ஏப்ரல் 21) முதல் 29 -ம் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் அந்த்யோதயா விரைவு ரயில் (எண் 20692) நாகர்கோவில் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. வரும் 24-ம் தேதி புதுச்சேரியிலிருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில் (எண் 16861) மற்றும் வரும் 25-ம்தேதி கன்னியாகுமரியில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயில் (எண் 16862) ஆகியவை திருநெல்வேலி - கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வரும் 28-ம் தேதி சென்னையில் இருந்து மாலை 6.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (எண் 12667) மற்றும் வரும் 29-ம் தேதிநாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திரவிரைவு ரயில் ஆகியவை திருநெல்வேலி - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வரும் 29-ம் தேதி கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (எண் 12634) கன்னியாகுமரியில் இருந்து 45 நிமிடங்கள் தாமதமாக மாலை 5.50 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 28-ம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா விரைவு ரயில் (எண் 20691) திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago