திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி மாணவர் களுக்கு தரமான உணவு வழங்காத பள்ளி காப்பாளரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு மலை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலை பள்ளியில் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை. மேலும், பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட அங்கு இல்லை என குற்றஞ்சாட்டிய பெற்றோர், மாணவர்களுடன் இணைந்து நேற்று முன்தினம் பள்ளி முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பெற்றோர் மற்றும் மாணவர்களின் போராட்டம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா புதூர் நாடு கிராமத்துக்கு நேற்று வந்தார்.
இதையடுத்து, ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி மற்றும் அரசுமரத்துக்கொல்லையில் உள்ள உண்டு உறைவிட நடுநிலை பள்ளி என 2 பள்ளிகளுக்கு அவர் சென்றார். பள்ளியில் சமையல் அறைக்கு சென்ற ஆட்சியர் அங்கிருந்து உணவுப்பொருட்கள், சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், காய்கறி, முட்டை, பருப்பு உள்ளிட்டவைகளை அவர் ஆய்வு செய்தார்.
இது குறித்து ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறுகையில், ‘‘திருப்பத்தூர் புதூர்நாடு மலை கிராமத்தில் இயங்கி வரும் ஏகலைவா உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி மற்றும் அரசுமரத்துக்கொல்லையில் செயல்பட்டு வரும் உண்டு உறைவிட நடுநிலை பள்ளிகளில் மொத்தம் 498 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்த மதிய உணவு தரமாக இல்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனடிப்படையில் இந்த பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், ஒரு சில உணவுப் பொருட்கள் தரமாக இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன்பேரில், உணவு பொருட் களை பள்ளிக்கு விநியோகம் செய்யும் வெளிமுகமை ஒப்பந்ததாரர் வினோத்குமார் என்பவருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது. அதேநேரத்தில் பள்ளி யின் காப்பாளர் ராமச்சந்திரன் என்பவர் மீது சஸ்பெண்ட் நட வடிக்கை எடுக்க பழங்குடியினர் நல திட்ட அலுவலருக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
மேலும், திருப்பத்தூர் மாவட் டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளின் தரம் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரம் குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு திருப்தி இல்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்’’ என்றார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ராஜ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago