சென்னை: குடிபோதையில் தன்னுடைய 2 வயதுக் குழந்தையை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளதை அறிந்து வேதனை அடைந்தேன். மது அரக்கனுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில், ``தூத்துக்குடி தாளமுத்து நகரில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து கணவன் கொலை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குடி மனிதனை கொடூரனாக்கும் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம் ஆகும்.
அனைத்துக் குற்றங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது மது தான். கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் மது தான் மூல காரணமாக இருக்கிறது. மது வணிகம் தொடரும் வரை, மனித குலத்துக்கு எதிரான இத்தகைய கொடிய குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது.
குற்றங்கள் இல்லாத, அமைதியான தமிழகத்தை உருவாக்க மதுவிலக்கு தான் ஒரே வழி ஆகும். அதனால் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
» 'கல்வி மட்டும்தான் திருட முடியாத சொத்து' - தமிழக முதல்வர் ஸ்டாலின்
» தமிழகத்தில் மேலும் 5 இடங்களில் அகழாய்வு - அமர்நாத் ராமகிருஷ்ணா தகவல்
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago