அதிமுக மாவட்டச் செயலாளர் தேர்தல் ஏப்.21, 25-ம் தேதிகளுக்கு மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுகவின் மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 21, 25 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

அதிமுக அமைப்புரீதியாகச் செயல்படும் மாவட்டங்களின் ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை,மாநகராட்சி வார்டு நிர்வாகிகளுக்கான தேர்தல் 3 கட்டமாக நடத்தப்பட்டது. இதில் தேர்வான நிர்வாகிகளின் பட்டியலை அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டு வருகிறது.

இதற்கிடையே, மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் 19-ம் தேதி (இன்று) நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில், முதல்கட்டத் தேர்தல் 21-ம் தேதியும், 2-ம் கட்டத் தேர்தல் 25-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதன்படி, முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தென்காசி, நீலகிரி, கரூர், திருப்பூர், நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி ஆகியமாவட்டங்களின் அமைப்புரீதியாகப் பிரிக்கப்பட்ட 37 மாவட்டங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை ஓபிஎஸ், இபிஎஸ் நியமித் துள்ளனர்.

அதேபோல, பிற மாநிலங்களில்உள்ள கிளை, கம்யூன் பஞ்சாயத்து,வார்டு, வட்டக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் 23-ம் தேதி நடக்கிறது. போட்டியிட விரும்புவோர், மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு ரூ.25 ஆயிரமும், இதர நிர்வாகிகளுக்கு ரூ.100 முதல் ரூ.5ஆயிரம் வரை கட்டணம் செலுத்திவிண்ணப்பத்தைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்