இலவசம் என்ற மாய வலையில் சிக்காமல் வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசியல் குறித்து சாதாரண மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை விட திருநங்கைகள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக சீமானுடைய நாம் தமிழர் கட்சியில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல் திருநங்கை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பம்பரமாக சுழன்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் கோ.தேவி என்ற திருநங்கை.
அவர் நம்மிடம் கூறியதாவது: எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த மகுடஞ்சாவடி. 12-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். உடலில் ஏற்பட்ட பாலின மாற்றம் காரணமாக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். ஆதரவற்ற மக்களுக்காக நான் தாய்மடி இல்லம்’ என்ற அறக்கட்டளையை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலை என் மனதில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போதுதான் அரசியலில் சேர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறிய கருத்து எனது கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு அக்கட்சியில் சேர்ந்தேன்.
நான் போட்டியிடுவது முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் தொகுதி. எனவே வெற்றி வாய்ப்பை பற்றி நான் கவலைப்படவில்லை. ஒவ்வொரு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன்.
நான் வெற்றி பெற்றால் தொகுதி பிரச்சினைகளையும் தீர்க்க முக்கியத்துவம் கொடுப்பேன். அரசியல் கட்சியினர் அளிக்கும் இலவச பொருட்கள், 100 ரூபாய் பணத்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரப் போவதில்லை. இலவசம் என்ற மாய வலையில் சிக்காமல் வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு தேவி கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago