திருநாவுக்கரசர் ஆதரவாளருக்கு மதுரையில் சீட்: இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர் அதிர்ச்சி

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு திருமங்கலம், மதுரை வடக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.ஜெயராமன் வேட்பாளராக்கப்பட்டுள்ளார். இவர் மாநில தலைவர் இளங்கோவனின் ஆதரவாளர். மதுரை வடக்கு தொகுதியில் வி.கார்த்திகேயன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் சு.திருநாவுக்கரசர் ஆதரவாளர். இத்தொகுதியில் நகர் காங்கிரஸ் தலைவர் அன்னபூர்ணா தங்கராஜ், மாநில துணைத்தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன், வர்த்தக காங்கிரஸ் பிரமுகர் சிம்மக்கல் ராமசாமி உட்பட 11 பேர் சீட் கேட்டனர். இளங்கோவனின் தீவிர ஆதரவாளரான தங்கராஜுக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், கார்த்திகேயனுக்கு சீட் கிடைத்தது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கட்சியினர் கூறுகையில், ‘ கார்த்திகேயனின் தந்தை வீரணசாமி வழக்கறிஞர். திருநாவுரக்கரசரின் வகுப்பு தோழர். திருநாவுக்கரசருக்கு வழங்கப்பட்ட சீட்டை தனது ஆதரவாளருக்கு பெற்றதால், தங்கராஜ் ஏமாற்றமடைந்தார். தங்கராஜ் கூறுகையில், ‘உறுதியாக சீட் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டுள்ளேன். நிர்வாகிகள் கூட்டத்தில் எப்படி செயல்படுவது என முடிவெடுக்கப்படும்’ என்றார். கே.எஸ்.கோவிந்தராஜன் கூறுகையில், ‘ தமிழகத்தில் ஐஎன்டியுசிக்கு ஒரு இடம்கூட வழங்கவில்லை என்றார்.

வேட்பாளர் விவரம்

திருமங்கலம் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.ஜெயராம் (51). நாயுடு சமூகத்தைச் சேர்ந்த இவரது மனைவி அமுதாராணி, மகன், மகள் உள்ளனர். உணவகம், விவசாயம் செய்து வருகிறார். மதுரை தெற்கு மாவட்ட தலைவர். 1992 முதலே கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகிக்கிறார். மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.

வடக்கு காங்கிரஸ் வேட்பாளர் வி.கார்த்திகேயன் (39). மதுரை கே.கே.நகரில் வசிக்கும் இவரது பூர்வீகம் சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம். மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். மனைவி ஆஷாதேவி யாதவா கல்லூரியில் உதவி பேராசிரியையாக உள்ளார். ஹரீஷ் பாலாஜி, சுபாஸ்ரீ என 2 குழந்தைகள். மதுரை நகர் காங்கிரஸ் பொதுச்செயலராக உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்