மதுரை: மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் புதிய குடிநீர் குழாய், பாதாள சாக்கடைப் பணிகள் நடக்கின்றன. அதற்காக தாறுமாறாக தோண்டப்பட்டிருப்பதால் சாதா ரண மழைக்கே சாலைகள் சேறும், சகதியுமாக மாறி உள்ளன.
மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வைகை வடகரையில் ரூ.274 கோடியில் பாதாள சாக்கடைப் பணிகள் நடக்கின்றன. அதற்காக சாலைகளை தோண்டி குழாய்கள், தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. பணிகள் முடிந்த சாலைகளில் குழிகளை சரியாக மூடவில்லை. தென்கரை பகுதி 13 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது. விரைவில் பணிகள் தொடங்க இருக்கின்றன.
பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 100 வார்டுகளில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. ‘அம்ரூட்’ திட்டத்தில் 28 வார்டுகளில் ரூ.275 கோடியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கி நடக்கிறது. மீதமுள்ள வார்டுகளில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளுக்கு வரும் 28-ம்தேதி டெண்டர் விடப்பட இருக்கிறது. இப்படி ஒரே நேரத்தில் 100 வார்டுகளிலும் பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் நடக்கும் அனைத்து சாலைகளிலும் குழி தோண்டப்பட்டுள்ளன. இதில் சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலைகளும் தப்பவில்லை.
மதுரையில் கோடைமழை பெய்து வரு கிறது. ஏற்கெனவே மதுரையின் சாலைகளில் லேசான மழைக்கே குளம் போல் தண்ணீர் தேங்கும். தற்போது தோண்டி போடப் பட்டுள்ளதால் பெரும்பாலான குடி யிருப்பு சாலைகள் சேறும், சகதியுமாக மாறி மக்கள் நடக்கக்கூட முடியாதவாறு மோசமான நிலை யில் உள்ளன. முன்பு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால், மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. அதனால் பொதுமக்களின் கோரிக்கைகள் அதிகாரிகள் கவனத்துக்குச் செல்வதில் தேக்கம் ஏற்பட்டிருந்தது.
தற்போது 100 வார்டுகளுக்கும் கவுன்சிலர் கள், மேயர், துணைமேயர் இருந்தும் மதுரை யின் சாலைகள் குறித்தும், மக்களின் சிரமங் கள் பற்றியும் கவலைப்படுவதாக தெரிய வில்லை. பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை மேயர் நேரடியாக ஆய்வுசெய்து துரிதப்படுத்துவதோடு, இத னால் குடியிருப்புவாசிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மேம்பாட்டுப் பணிகள் நடப்ப தால் பொது மக்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட்டிருக்கலாம். பணிகளை விரைந்து முடித்து சாலைகளை புதுப்பிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago