சென்னை: தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையால் ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பல ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஏப்.18, 19, 20-ல் ராமேசுவரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலிலும் (22662), ஏப்.18-ம் தேதி காரைக்கால் - எழும்பூர் ரயில் (16176), காரைக்கால் - எர்ணாகுளம் ரயிலிலும் (16186) ஒரு 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.
இன்று (17-ம் தேதி) தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் (22657), ஏப்.18-ம் தேதி நாகர்கோவில் - தாம்பரம் ரயிலில் (22658) ஒரு 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இன்று மதுரை - சென்னை சென்ட்ரல் துரந்தோ (20601), மங்களூரு - எழும்பூர் (16160),எழும்பூர் - காரைக்கால் (16175), காரைக்கால் - எர்ணாகுளம் (16188) ஆகிய ரயில்களில் ஒரு 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது. பானஸ்வாடி - கொச்சுவேலி ரயிலில் (16320) ஒரு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி, திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் குளிர்சாதன ரயிலில் (22208) ஒரு இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.
இன்று முதல் 20-ம் தேதி வரை சென்னை - திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு ரயில் (16723), எழும்பூர் - ராமேசுவரம் (22661), சென்னை - ராமேசுவரம் - சென்னை (16851/16852), தஞ்சாவூர் - எழும்பூர் - தஞ்சாவூர் (16866/16865), மங்களூரு - சென்னை சென்ட்ரல் (12602/22638), சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் (12695/12696), சென்னை சென்ட்ரல் -ஆலப்புழா - சென்னை சென்ட்ரல் (22639/22640), எழும்பூர் - குருவாயூர் (16127) ஆகிய ரயில்களில் ஒரு 2-ம் வகுப்பு படுக்கைவசதி பெட்டி இணைக்கப்படுகிறது.
இன்று முதல் 21-ம் தேதி வரை திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி (16724), மதுரை திருவனந்தபுரம் அமிர்தா (16344), குருவாயூர் - சென்னை (16128), சென்னை சென்ட்ரல் - மங்களூரு (12601/22637) ரயில்களிலும் ஒரு 2-ம் வகுப்பு படுக்கைவசதி பெட்டி இணைக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago