சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் - சித்திர குப்தனுக்கு சிறப்பு பூஜை

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று கிரிவலம் சென்றனர்.

சிறப்பு பெற்ற சித்ரா பவுர்ணமி விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. மேலும், அம்மன் சன்னதி எதிரே உள்ள சித்திர குப்தன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், சித்திர குப்தனையும் வழிபட்டனர். இரவு 11 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் அதிகளவில் திரண்டனர். அவர்கள், சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட பக்தர்கள், திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்தனர்.

சித்ரா பவுர்ணமியன்று, மலையே மகேசன் என போற்றப்படும் 14 கி.மீ., தொலைவுள்ள அண்ணாமலையை பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர். பக்தர்களின் கிரிவலம் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கியது. இன்று அதிகாலை வரை விடிய, விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று இறைவனை வழிபட்டனர். மேலும், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணாமலை மற்றும் அஷ்டலிங்கங்கள் உள்ளிட்ட கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு சித்ரா பவுர்ணமி விழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பக்தர்களின் வருகையும் அதிகமாக இருந்தன. 40 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன.

நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் துப்புரவுப் பணியை தூய்மை பணியாளர்கள் இடைவிடாமல் மேற்கொண்டனர். பக்தர்களின் வசதிக்காக 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்