அயோத்யா மண்டப வரவு செலவை ஆராய குழு: அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அயோத்யா மண்டபத்தின் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்ய தணிக்கை குழு அமைத்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் ஸ்ரீராம் சமாஜ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் அயோத்யா மண்டபம் இயங்கி வந்தது. இந்தசூழலில், ஸ்ரீராம் சமாஜ் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி இந்து சமய அறநிலையத் துறை கடந்த 2013-ம் ஆண்டு அயோத்யா மண்டபத்தை கையகப்படுத்த முடிவு செய்தது.

இதை எதிர்த்து, ராம் சமாஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை அயோத்யா மண்டபத்தை கையகப்படுத்தியது. கையகப்படுத்தியதை எதிர்த்து ராம் சமாஜ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், அயோத்யா மண்டபத்தில் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்ய தணிக்கை குழு அமைத்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து வருகிற 19-ம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க தணிக்கைக்குழு அமைத்து உத்தரவிடப்படுகிறது.

இக்குழுவில், இந்து சமய அறநிலையத் துறையின் மண்டல தணிக்கை அலுவலர் (மடங்கள் பிரிவு) ந.தனலட்சுமி, தலைமை தணிக்கை அலுவலர் அலுவலக மண்டல தணிக்கை அலுவலர் (நடமாடும் தணிக்கை குழு) ஜி.எம்.ஈஸ்வரன், சென்னை துணை தலைமை தணிக்கை அலுவலர் அலுவலகத்தின் தணிக்கை கண்காணிப்பாளர் மு.சிவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் ஆணையர் தெரிவித்துள்ளார்.

போலீஸ் பாதுகாப்பு

அயோத்யா மண்டபத்தை அறநிலையத் துறை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடி வரும் ராம சமாஜம் அமைப்பின் உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ரமணி(68), தனக்கு கொலை மிரட்டல் வருவதாக காவல் ஆணையரிடம் மனு அளித்திருந்தார். இதையடுத்து, ரமணிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்