இயேசுவின் உயிர் தியாகம், மனித நேயத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம்: தமிழக ஆளுநர் ரவி

By செய்திப்பிரிவு

சென்னை: இயேசு உயிர் தியாகம் செய்த மனித நேயத்திற்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது புனித வெள்ளியொட்டி ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இதனை ஆண்டுதோறும் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். கிறிஸ்துவர்களின் தவக்காலம் சாம்பல் புதனன்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. இன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன.

இந்நிலையில் இயேசு உயிர் தியாகம் செய்த மனித நேயத்திற்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும் தமிழக ஆளுநர் ரவி தனது புனித வெள்ளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கர்த்தராகிய இயேசு பாடுபட்டு தன் உயிரை தியாகம் செய்த மனிதநேயத்திற்காக நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்