'பில் வரும் வரை காத்திருப்போம்' - அண்ணாமலையின் 'டீ' கருத்துக்கு அமைச்சர் பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் டீ செலவு மிச்சம் கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் பதில் கொடுத்துள்ளார்.

தமிழ் புத்தாண்டை அடுத்து தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால் இந்த விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. பாஜக மற்றும் அதிமுக மட்டுமே இந்த விருந்தில் கலந்துகொண்டன.

முன்னதாக, இந்த புறக்கணிப்பு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். மக்கள் வரிப்பணம் கொஞ்சம் மிச்சமாகிறது. ஆளுநர் என்பவர் தமிழக மக்களின் பிரதிநிதி. ஆளுநர் விருந்துக்கு அழைப்பது என்பது காலம் காலமாக உள்ள மரபு. இதே ஆளுநர் சட்டப்பேரவையில் கடந்த முறை ஆளுநர் உரையில் திமுக அரசு எழுதி கொடுத்ததை அப்படியே படித்தார்.

அதை நானே எதிர்த்து பேசியிருந்தேன். அந்த உரையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று இருந்தது. தமிழக அமைச்சரவை எடுத்த முடிவு என்பதற்காக மாண்பு கருதியே திமுக அரசு எழுதி கொடுத்ததை அப்படியே படித்தார் ஆளுநர். அப்போது மாண்பு இருந்தது, இப்போது இல்லையா. அனைத்தையும் அரசியல் செய்ய வேண்டும் திமுக நினைக்கிறது. ஆளுநர் 11 மசோதாக்களையும் திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளார். அதை திமுக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிடுமா?" என்று பதிலளித்திருந்தார்.

அண்ணாமலையின் கிண்டலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷாநாவஸ், "பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்றுவர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும். தமிழ் நாட்டின் உரிமைப் பிரச்சனைக்கான புறக்கணிப்பை தேநீர் செலவு மிச்சம் என மலினப்படுத்தக்கூடாது" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள், ஆளூர் ஷாநாவஸ் சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்" என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்