திருப்பத்தூர் அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்தை சேர்ந்த சாசனக்கல் கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்:திருப்பத்தூர் அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகள் மற்றும் சோழர்காலத்தைச் சேர்ந்த ‘சாசனக் கல்’ கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூக்கு அருகே ஊர்மேடு என்ற இடத்திலுள்ள மலைக்குன்றில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்திட்டைகள் இருப்பதும், மேலும் சோழர்காலத்து ‘சாசனக்கல்’ ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஆ. பிரபு மற்றும் ஆய்வு மாணவர்கள் சந்தோஷ், சரவணன் உள்ளிட்டோர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வுப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் அருகேயுள்ள ஊர்மேடு கிராமத்தில் அமைந்துள்ள மலைக்குன்றில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகளும், சோழர்காலத்தைச் சேர்ந்த ‘சாசனக்கல்’ இருப்பதை கண்டெடுத்துள்ளனர்.

இது குறித்து முனைவர் ஆ.பிரபு கூறியதாவது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூரில் ஏற்கெனவே பல வரலாற்றுத் தடயங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆண்டி யப்பனூரில் இருந்து 6 கி.மீ.,தொலைவில் உள்ள ‘ஊர்மேடு’என்ற இடத்தின் அருகே ‘சின்னப்பாண் டவர் குட்டை’ என்ற இடம் குறித்த தகவல் எங்கள் குழுவுக்கு கிடைத்தது. உடனே, நாங்கள் அங்கு சென்றோம். அங்குள்ள சிறிய மலைக்குன்றில் ஆய்வு செய்தபோது, அங்கு 15-க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் இருப்பதை கண்டறிந்தோம். மேலும், இப்பகுதியில் ஓடும் காட்டாற்றின் அருகே ‘சாசனக்கல்’ என்ற இவ்வூர் மக்களால் அழைக்கப்படும் எல்லைக் கல் (சூலக்கல்) ஒன்று இருப்பதையும் கண்டறிந்தோம்.

இங்குள்ள கற்திட்டைகள் கரடு முரடான கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பெரிய பலகை கற்களைக் கொண்டு அமைக்கப்படும் கல்லறைஅமைப்பே கற்திட்டைகள் (Dolm ens) என அழைக்கப்படுகின்றன.

குறிஞ்சி மற்றும் முல்லை போன்ற நிலப்பகுதிகளில் இது போன்ற கற்திட்டைகளை அமைப்பதற்கு தேவையான மூலப்பொருளான கற்கள் எளிதில் கிடைப்பதால் இவ்விரு நிலப்பகுதிகளிலும் பெருங் கற்சின்னங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் தி.மலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கற்பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் ஏராளமாக கண்டறியப்படுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட இப்பகுதியானது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் வாழ்ந்த பகுதி யாக அடையாளம் காண இது போன்ற வரலாற்றுத் தடயங்கள் நமக்கு உதவுகின்றன.

அதேபோல, அங்குள்ள அடர்ந்த முட்புதருக்குள் இருந்த சாசனக்கல்லினை தேடிக் கண்டறிந்து சுத்தம் செய்த போது அங்கு ‘சூலக்கல்’ இருப்பதை காண முடிந்தது. அந்த கல்லில் திரிசூலம் கோட்டுருவ அமைப்பில் நடுவில் செதுக்கப்பட்டு அதன் இருபுறமும் சூரியன், பிறை நிலவு வடிக்கப்பட்டுள்ளன.

கீழ்புறம் உடுக்கை வடிவம் காட்டப்பட்டுள்ளன. இக்குறியீடுகள் சைவ திருக்கோயில்களுக்கு நிலக்கொடை வழங்கியதை குறிக்கவோ அல்லது சைவ திருக்கோயிலுக்குரிய நில எல்லையினை குறிக்கவோ நடப்படுவதாக இருக்கும். இந்த கல்லானது சோழர்காலத்தைச் சேர்ந்ததாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூரில் ஏற்கெனவே 2-ம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

தற்போது, ஆள் நடமாட்டமே இல்லாத இந்த இடத்தில் முந்தைய காலத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. அதற்கு சான்றாக இக்கல்லும் இப்பகுதியை ‘ஊர்மேடு’ என்ற பெயரும் தக்க சான்றுகளாக அமைகின்றன. இது போன்ற அரிய வரலாற்று தடயங்களை உலக மக்களுக்கு எடுத்துக்கூற தொல்லியல் துறையினர் முன்வர வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்