7,15,476 லிட்டர் ஆவின் பால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: வெளிநாடுகளுக்கு இதுவரை ரூ.355.30 லட்சம் மதிப்பிலான 7,15,476 லிட்டர் பால் மற்றும் ரூ.115.39 லட்சம் மதிப்பிலான நெய், ரூ.0.99 லட்சம் மதிப்பிலான 1,107 லிட்டர் நறுமணப்பாலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியுள்ளது. இன்று வேளாணமை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம்), மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின்அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாசர், அனிதா ராதாகிருருஷ்ணன் ஆகியோர் பதிலளித்தனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர். பால்வளத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்:

> தரமதிப்பினை கூட்டவும், பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை கூட்டவும், ஆவின் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

> சேலம் ஒன்றியம் அதிவெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட UHT பால் மற்றும் நறுமண பால் டெட்ரா பாக்கெட்டுகளுக்கு ஏற்றுமதி உரிமம் பெற்றுள்ளது.

> ஈரோடு ஒன்றியம் நெய் ஏற்றுமதிக்கான உரிமம் பெற்றுள்ளது.

> திருவண்ணாமலை பால் மற்றும் பால் பவுடர் ஆலை, கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் மற்றும் நெய் ஏற்றுமதிக்கான் உரிமம் பெற்றுள்ளது.

> சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார் மற்றும் துபாய் போன்ற அயல் நாடுகளுக்கு ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகிறது. இதர வெளிநாடுகளுக்கும் பால் பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

> இதுவரை வெளிநாடுகளுக்கு ரூ.355.30 லட்சம் மதிப்பிலான 7,15,476 லிட்டர் பால் மற்றும் ரூ.115.39 லட்சம் மதிப்பிலான நெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.0.99 லட்சம் மதிப்பிலான 1,107 லிட்டர் நறுமணப்பால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

> தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆவின் பொருட்களை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் விற்பனை செய்வதற்கான மொத்த விற்பனையாளர்களுக்கான நியமன உத்தரவையும், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மன், ஓமன், கத்தார், கனடா மற்றும் அமெரிக்கா (கலிபோர்னியா) ஆகிய வெளிநாடுகளில் ஆவின் பொருட்களை விற்பனை செய்வதற்கு வணிக ஏற்றுமதியாளர்களுக்கான வணிக ஒப்பந்த ஆணைகளையும் வழங்கியுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்